மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் 49 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி !

Education, Indian Student, Malaysia, Malaysia, Sports, Tamil Schools

 144 total views,  5 views today

மாலிம் நாவார் – 1 ஆகஸ்டு 2022

மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் 49ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. கோவிட்-19 முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியே மாணவர் நடவடிக்கைகள் தொடங்கி விட்ட நிலையில், இப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

குறுகிய காலத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்துத் தயார் செய்தனர். இந்த விளையாட்டுப் போட்டிக்கு ம.இ.கா கம்பார் தொகுதி தலைவரும் கம்பார் மாவட்ட மன்ற உறுப்பினருமான பாலரத்தினம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தலைமையுரையாற்றிய தலைமையாசிரியர் சந்தனராஜ் தெரிவிக்கயில், விளையாட்டுப் போட்டியின் வெற்றிக்குத் துணைநின்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், நன்கொடையாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் தம் நன்றியைப் பதிவு செய்தார். பள்ளியின் வளர்ச்சிக்குத் துணைநிற்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

போட்டி நாளன்று மாணவர்களின் இசை நடனம், இசை உடல் பயிற்சி, அணிவகுப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்தன. படிநிலை 1 – 2 என தனித் தனிப் பிரிவுகள், பாலர் பள்ளி மாணவர், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், போட்டி நாளுக்கு முன்னதாகவே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், குறுக்கோட்டம் ஆகியப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு போட்டி நாளன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்முறை 4ஆம் ஆண்டு ஹரிஷ்வர்மன் சிறந்த ஆண் விளையாட்டாளராகவும் 5ஆம் ஆண்டு ருத்ராஷினி சிறந்த பெண் விளையாட்டாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply