மாஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய்?

Cinema, News

 326 total views,  1 views today

சென்னை-

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தைத் தொடர்ந்து ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். 

வம்சி இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படம் குறித்து முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அடுத்த படத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் தற்போது கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply