தெறி மாஸாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்

Cinema, News

 421 total views,  1 views today

சென்னை-

டைரக்டர் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட வரலாற்று படைப்பான பொன்னியின் படம் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஐ சேனல் செய்திகள் 2/3/2022

Subscribe:

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

உலகின் பல நாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முக்கிய கேரக்டர்களான ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் போஸ்டருடன், படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் உள்ளது என மொத்தம் 6 போஸ்டர்களை இன்று வெளியிட்டு அசத்தி உள்ளனர்.

Leave a Reply