மித்ராவை மிஞ்சும் ஐ-சீட்

Malaysia, News

 152 total views,  1 views today


ரா.தங்கமணி


ஷா ஆலம்,அக்.30-
வெ.100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மித்ராவை காட்டிலும் வெ.1 மில்லியன் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஐ-சீட் (I-SEED) பிரிவு தங்களின் திட்டத்தில் வெற்றி கண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் டிக்கம் லூதர்ஸ் தெரிவித்தார்.


இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவான மித்ராவுக்கு வெ.100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் நிதி முறைகேடுகளில் சிக்கி தற்போது எம்ஏசிசி-இன் விசாரணை வளையத்திற்குள் வந்து நிற்கிறது.


ஆனால், சிலாங்கூர் மாநிலத்தில் அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கண்காணிப்பில் கீழ் அமைந்துள்ள ஐ-சீட் அமைப்பு சிறு, நடுத்தர இந்திய வணிகர்களின் வர்த்தக மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு வெ.1 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 267 பேருக்கு வர்த்தகப் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்று அவர் சொன்னார்.


ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கட்டங்கட்டமாக வர்த்தகப் பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையில் நேற்று கிள்ளான் மாவட்டத்தில் பல இடங்களுக்கு சென்று 60 விண்ணப்பதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மித்ராவை காட்டிலும் மிகக் குறைவான மானியத்தில் செயல்படும் ஐ-சீட் அமைப்பு இந்திய சமுதாயத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Leave a Reply