மித்ரா நிதியில் முறைகேடு? எம்ஏசிசி விசாரணையில் 16 நிறுவன இயக்குனர்கள்

Uncategorized

 205 total views,  1 views today

கோலாலம்பூர்-

இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவான மித்ராவின் நிதியில் முறைகேடு செய்துள்ளதாக 16 நிறுவன இயக்குனர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையும் (எம்ஏசிசி) தடுத்து வைத்துள்ளது.


நேற்று இரவு முதல் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய இவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டதாக எம்ஏசிசி பேச்சாளர் தெரிவித்தார்.


இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுப்பதாக கூறி மானியம் விண்ணப்பித்த இக்கும்பல் பல மில்லியனை பதுக்கியிருப்பதாக அத்தரப்பு கூறுகிறது.


இந்த வழக்கு 2018 முதல் தற்போது வரை மித்ரா மூலம் வழங்கப்பட்ட அனைத்து வகையான விண்ணப்பங்கள், மானிய ஒதுக்கீடு செலவுகளையும் உள்ளடக்கியுள்ளதாகும்.

சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் நிறுவனங்கள், தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவை பெற்றுக் கொண்ட மானிய ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 60% சரியான இலக்கை சென்றடையவில்லை என்று நாங்கள் மதிப்பிடுவதாக கூறப்பட்டது.


இந்த ஒதுக்கீடு மித்ராவிடமிருந்து விண்ணப்பித்து பின்னர் சில தனிநபர்களின் நலனுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

Leave a Reply