மித்ரா நிதி தொடர்பில் அமைச்சர் பதிலளிக்க வேண்டும்

Malaysia, News, Politics

 172 total views,  2 views today

கோலாலம்பூர்-

மித்ரா நிதி விவகாரம் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர்கள் தான் பதிலளிக்க வேண்டும். அதையேதான் நானும் விரும்புகிறேன். ஆனால் பதில் வழங்கும்படி அவர்களை தாம் கட்டாயப்படுத்த முடியாது என்று மக்களவை சபாநாயகர் அஸார் ஹருண் தெரிவித்தார்.

மித்ரா நிதி விவகாரம் மக்களவையில் பெரும் சர்ச்சையாக வெடித்து வரும்  நிலையில் மித்ரா நிதி முறைகேட்டில் மஇகா தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் எழுப்பிய கேள்விக்கு இவ்விவகாரத்தை எம்ஏசிசி விசாரணை நடத்தி வருவதால் தாம் பதிலளிக்க முடியாது என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா சித்திக் கூறினார்.

மித்ரா விவகாரத்தில் பதில் வழங்க மறுத்த் ஹலிமாவின் போக்கு தங்களது ஏமாற்றத்தை அளிப்பதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட் ஆகியோர் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்துரைத்த அஸார் ஹருண் மக்களவையில் எழுப்பப்படும் கேள்விக்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண:

Leave a Reply