மித்ரா நிதி; 10 நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்படும்

Malaysia, News, Politics

 152 total views,  1 views today

மலாக்கா-

2019 -ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டு வரையில், தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் என 337 தரப்புகளுக்கு வழங்கப்பட்ட , மொத்தம் 20 கோடியே 30 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய மித்ரா நிதி தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

அதில் 10 நிறுவனங்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டிருக்கும் விசாரணை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

அதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டை விதிப்பது என முடிவு செய்ய, விசாரணையின் முடிவு, அரசாங்க துணை வழக்கறிஞரிடம் ஒப்படைக்குமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அந்த 10 நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , 80 விழுக்காடு நிறுவனங்கள் மித்ரா நிதியை சொந்த நலனுக்காக முறைகேடு செய்திருப்பது தெரிய வந்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.

இவ்வேளையில் மேலும் 17 நிறுவனங்களை உட்படுத்திய விசாரணை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொத்த இரு கட்டங்களாக அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டத்தில் பத்து லட்சத்திலிருந்து 90 லட்சம் வரையில் நிதி ஒதுக்கீடு பெற்ற 27 நிறுவனங்கள் விசாரிக்கப்படுகின்றன.

இரண்டாவது கட்ட விசாரணை பத்து லட்சத்துக்கும் குறைவான ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களை உட்படுத்தயிருக்கிறது. அந்த விசாரணை ஒருமைப்பாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படும் சிறப்பு செயற்குழுவின் மூலமாக விசாரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply