மித்ரா மானிய குற்றச்சாட்டு; எம்ஏசிசியை நாடுகிறார் வேதமூர்த்தி

Malaysia, News

 259 total views,  4 views today

கோலாலம்பூர்,அக்.20-

இந்திய சமூக பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு வழங்கப்பட்ட மானிய விவகாரம் தொடர்பில் ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா சித்திக் கூறிய குற்றச்சாட்டை விசாரிக்கக் கோரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யவிருக்கிறார் முன்னாள் ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

கடந்த 2020 மற்றும் 2021இல் வழங்கப்பட்ட வெ.200 மில்லியனில்  வெ.85.9 மில்லியன் நிதியை பழைய கடன்களுக்கு செலுத்தியதாக மக்களவையில் ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஐ-சேனலின் E-Paper-ஐ-படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ அழுத்தவும்..

அவரின் குற்றச்சாட்டுக்கு இதுவரையிலும் தெளிவான விளக்கத்தை அவர் கொடுக்காததால் இந்த குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 20ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வேதமூர்த்தி புகார் அளிக்கவிருக்கிறார்.

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை’யாக மித்ராவின் மானியம் தொடர்பில் ஹலிமா கூறிய கருத்துக்கு பின்னர் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Leave a Reply