மின்சுடலைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – கணபதிராவ்

Malaysia, News

 404 total views,  1 views today

ஷா ஆலம்-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மூன்று ஊராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் மின்சுடலைகள் இனி மாலை 6.30 மணி வரை செயல்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ஷா ஆலம், கிள்ளான், சுபாங் ஜெயா ஆகிய மூன்று ஊராட்சி மன்றங்களின் நிர்வகிப்பில் செயல்படும் மின்சுடலைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு மாலை 4.30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த மின்சுடலைகள் இனி 6.30 மணி வரையிலும் செயல்படும்.
சம்பந்தப்பட்ட மூன்று ஊராட்சி மன்ற அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த நேர நீட்டிப்பு சாத்தியமாகியுள்ளது என்று குறிப்பிட்ட கணபதிராவ், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியர்கள் உட்பட அனைத்து இன மக்களின் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சவக்கிடங்கில் கிடத்தி வைக்கப்படும் சடலங்களை விரைந்து தகனம் செய்வதற்கு இது ஏற்புடைய வழியாக இருக்கும் என்று சொன்னார்.

Leave a Reply