மின்னியல் போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் விவாதிப்பேன்- வீ கா சியோங்

Malaysia, News

 314 total views,  1 views today

கோலாலம்பூர்-

பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டண உயர்வு அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மற்றும் குறைகள் தொடர்பில் மின்னியல் போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் போக்குவரத்து அமைச்சு ஆய்வு செய்து விவாதித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களை  அழைக்குமாறு உயர் நிர்வாகத்திற்கு தனது தரப்பு அறிவுறுத்தியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.

“தற்போதைய சூழ்நிலையில் வெ.20 என்று இருந்த கட்டணம் இப்போது வெ.70 ஆகிறது என்று சொன்னால், அது மக்களுக்கு சுமையாகவே பார்க்கப்படுகிறது, எனவே ஒரு கொள்கை வகுப்பாளராக எந்த நிறுவனமாவது லாபம் ஈட்டுவதற்காக வாய்ப்பை பயன்படுத்துகிறதா என்று ஆய்வு செய்கிறேன் என அவர் சொன்னார்.

Leave a Reply