மிளகாய், அட்டை, காளான் திட்டங்களில் படைக்கப்படாத சாதனை ஐ-சீட் படைத்துள்ளது- கணபதிராவ் பெருமிதம்

Malaysia, News

 201 total views,  2 views today

ரா.தங்கமணி

கிள்ளான்-

இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை பல தரப்பினர் அறிமுகப்படுத்தியிருந்தாலும் சிலாங்கூர் மாநிலத்தில் ஐ-சீட் திட்டம் சாதித்துள்ள வெற்றியை போல் யாரும் படைத்ததில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய வணிகர்கள் பொருளாதார ரீதியில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வணிகப் பொருட்களை வழங்கி உதவுவதே ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய வணிக, தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் முதன்மை நோக்கமாகும்.

கடந்த 2021இல் தொடங்கப்பட்ட ஐ-சீட் திட்டத்தின்  இதுவரை 254 இந்திய வணிகர்களுக்கு வர்த்தக பொருளுதவிகளை வழங்கி உதவியுள்ளோம். இந்திய வணிகர்களுக்காக வகுக்கப்பட்ட திட்டத்தில் ஐ-சீட் அடைந்துள்ள வெற்றியை கொண்டாடும் வகையிலேயே இந்த ஐ-சீட் தீபாவளி வணிகச் சந்தை ஏற்பாடு செய்துள்ளது.

குறுகிய காலத்திலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் மூலம் இந்திய வணிகர்கள் அடைந்துள்ள பயனை பறைசாற்றும் வகையில் 100 கூடாரங்கள் அமைத்து அதில் ஐ-சீட் திட்டத்தின் வழி பயனடைந்தவர்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பதை வேறு யாரால் சாதித்திட முடியும்?

இந்திய சமுதாயத்தை உள்ளடக்கி மிளகாய் நடவு, அட்டை வளர்ப்பு, காளான் பயிரிடுவது போன்ற பல திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் அத்திட்டங்களில் எல்லாம் படைக்கப்படாத சாதனை ஐ-சீட் படைத்துள்ளது.

பிற திட்டங்களில் கடைபிடிக்கப்படாத வெளிப்படைத்தன்மை ஐ-சீட் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்டதன்  காரணமாகவே இந்த வெற்றியை இங்கு கொண்டாடி கொண்டிருக்கிறோம்.  

அதற்கு அத்தாட்சி தான் இந்த தீபாவளி வணிகச் சந்தை என்று இங்குள்ள  த்தாரான் செட்டி பாடாங்கில் நடைபெற்று வரும் ஐ-சீட் தீபாவளி வணிகச் சந்தையை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசும்போது கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இதர செய்திகள்:

Leave a Reply