மீண்டும் களமிறங்குகிறேன் – டத்தோ மோகனா

News, Politics

 173 total views,  3 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.23-

பல மகளிரின்  நம்பிக்கையை பூர்த்தி செய்யவே மகளிர் அணி தேர்தலில் மீண்டும் களம் காண்கிறேன் என்று டத்தோ மோகனா முனியாண்டி தெரிவித்தார்.

மஇகா மகளிர் அணி தேர்தலுக்கான வேட்புமனு நேற்று நடைபெற்ற நிலையில் நடப்பு மகளிர் தலைவி திருமதி உஷா நந்தினியை எதிர்த்து மகளிர் அணி முன்னாள் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி போட்டியிடுகிறார்.

மஇகா மகளிர் அணி தேர்தலில் மீண்டும் களம் கண்டது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  பெரும்பாலான மகளிர் தன்னை மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதோடு,  கடந்த முறை மகளிர் அணி தலைவியாக பதவி வகித்தபோது கட்சி உட்பூசலை எதிர்கொண்டிருந்தது.

அந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி போராட்டத்திற்கு மத்தியிலும் முடிந்த சேவைகளை மேற்கொண்டேன். பின்னர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தலைமைத்துவத்தில் ஓராண்டு சிறப்பாக சேவையாற்றிய போதிலும் பொதுத் தேர்தல் வந்த பின்னர் சூழலே மாறி போனது.

கடந்த மூன்றாண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழலில் தற்போது கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி வலுவாக உள்ளது.

E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…

தற்போதைய சூழலில் மகளிருக்கான திட்டங்களை வகுத்து செயல்பட தம்மீது நம்பிக்கை கொண்டுள்ள மகளிரின் கோரிக்கைக்கு ஏற்பவே மகளிர் அணி தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தம்மிடம் வெளிப்படையாகவும் இலகுவாகவும் இணைந்து சேவையாற்ற முடியும் என்ற பலரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே இந்த தேர்தலை களம் காண்கிறேன் என்று டத்தோ மோகனா முனியாண்டி குறிப்பிட்டார்.

‘வெற்றி மகளிர்’ என களம் காணும் டத்தோ மோகனாவின் அணியின் துணைத் தலைவியாக திருமதி விக்னேஸ்வரி பாபுஜி, மத்திய செயலவைக்கு திருமதி கிருஷ்ணவேணி, திருமதி இன்பவள்ளி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply