மீண்டும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படலாம்- பிரதமர்

Malaysia, News, Politics

 314 total views,  1 views today

கோலாலம்பூர்-

GST எனப்படும் பொருள், சேவை வரியை மீண்டும் அமல்படுத்தும் சாத்தியம் இருப்பதை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோடி காட்டியுள்ளார்.

பண வீக்கம், மக்களின் வாழ்க்கைச் செலவீனம் உயர்ந்து வருவதால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு GST-யை அறிமுகப்படுத்துவதே ஆக்கப்பூரமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

வருமான அடிப்படையில் அரசாங்கத்தின் உதவித் தொகை சுமையை ஏற்றுக் கொள்ளும் வகையில் GST வரியை கொண்டு வருவதில் அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது.

நாட்டின் அடிப்படை வருமானத்தை அதிகரிப்பதற்கு GST பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் Nikkei Tokyo-வுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

Leave a Reply