மீண்டும் பெரிக்காத்தான் ஆட்சி இரண்டாவது முறையாக பிரதமராகிறார் டான்ஸ்ரீ முஹிடின்

Malaysia, News, Politics, Polls

 62 total views,  1 views today

இரா. தங்கமணி – 20/11/2022

நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

73 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ள பெரிக்காத்தான் நேஷனல் 30 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ள தேசிய முன்னணி, 22 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற ஜிபிஎஸ், 6 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற ஜிஆர்எஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம்.

இக்கூட்டணி அமையுமு பட்சத்தில் நாட்டின் 10 பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் பிரதமராக பதவியேற்கக்கூடும். துன் மகாதீருக்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பதவியை வகிக்கும் வாய்ப்பை டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பெறுகிறார்.

Leave a Reply