முகமட் அடிப் மரணத்தை விசாரிக்க சிறப்பு செயற்குழு- பிரதமர்

Malaysia, News

 127 total views,  2 views today

கோலாலம்பூர்-

தீயணைப்பு வீரர் முஹமட் அடிப் காசிமின் மரணம் குறித்து   விசாரிக்க சிறப்புக் குழுவை அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அடிப் மரணத்தில் முழுமையான, வெளிப்படையான, தற்காப்பு விசாரணையை உறுதி செய்வதே இந்த சிறப்பு செயற்குழுவின் நோக்கமாகும்.

முன்னாள் சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் எழுதிய “My Story: Justice in the Wilderness”  எனும் புத்தகத்தில் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னதாக ஓர் ஆரம்பக்கட்ட ஆய்வு நட்த்த இந்த சிறப்பு செயற்குழுவை அமைப்பதற்கு  அமைச்சரவை ஒப்புக் கொண்டது.

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம், சட்டம்) வான்  ஜுனாய்டி துவாங்கு ஜபார் இந்த சிறப்பு செயற்குழுவின் தலைவராக செயல்படும் நிலையில் உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின், வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ரீஸால் மெரிக்கான் நைனா மெரிக்கான்,  சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருன் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக செயல்படுவர் என்று  டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார்.

கடந்த 2019 நவம்பர் 27இல் சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலில் தாக்குதலுக்கு ஆளானதாக நம்பப்படும் முகமட் அடிப் 21 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 17ஆம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply