முகமூடி கும்பலால் இந்திய ஆடவர் தாக்கப்பட்டார்

Crime, Malaysia, News

 408 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

செபெராங் ஜெயா-

முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இந்திய ஆடவர் ஒருவர் கத்தியால் சராமாரியாக வெட்டப்பட்டார்.


இச்சம்பவம் நேற்றிரவு பினாங்கு, தென் மாவட்டம் சிம்பாங் அம்பாட் தாமான் மெராக் குடியிருப்புப் பகுதியிலுள்ள இரவுச் சந்தை வளாகத்தில் நிகழ்ந்தது.


சம்பவத்தன்று காரில் வந்திறங்கிய முகமூடி அணிந்த ஐந்து ஆடவர்கள் 25 வயதான யோகமணி முனிமாறன் எனும் ஆடவரை கத்தியால் சராமாரியாக தாக்கி தப்பியோடினர்.

இதில் கழுத்து, முதுகு, கால் பகுதியில் கடுமையான அவ்வாடவர் முதலில் சுங்கை பாக்காப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக செபெராங் ஜெயா பொது மருத்துவமனைக்கு பின்னர் மாற்றப்பட்டார்.

Leave a Reply