முட்டை அட்டையைக் கொண்டு மாபெரும் தேசியக் கொடி ! – மெர்டேக்கா கொண்டாட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 260 total views,  1 views today

சிம்மோர் – 30 ஆகஸ்டு 2022

இங்குள்ள கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் முட்டை அட்டைகளைக் கொண்டு மாபெரும் தேசியக் கொடியை உருவாக்கி தங்களின் விடுதலை நாள் கொண்டாட்டத்தில் மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர்.

பள்ளி அளவில் நடந்த மலேசியாவின் 65 வது விடுதலைஉ நாளில் இப்பள்ளியைச் சேர்ந்த படிநிலை 2 இன் 336 மாணவர்களும் 38 ஆசிரியர்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.

பயன்படுத்தப்பட்ட முட்டை அட்டைகளைக் கொண்டு புத்தாக்கத் திறனால் 25 மீட்டர் நீலத்திலும் 15 மீட்டர் அகலத்திலும் ஜாலோர் கெமிலாங்கை பள்ளியின் அவைகூடல் தளத்தில் உருவாக்கினர்.

தொடக்கப்பள்ளி பருவத்திலேயே நாட்டுப் பற்றை விதைக்கவும் மாணவர்களிடையே ஒற்றுமையுணர்வு, விட்டுக்கொடுத்தல் மற்றும் உதவும் மனப்பான்மையை வளர்க்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சிங்கார வடிவேலன் குறிப்பிட்டார்.

Leave a Reply