முட்டை கூட இல்லாத நிலையில் மக்களை வைத்தது தேமு, பிஎன் ஆட்சி- அன்வார்

Malaysia, News, Politics

 88 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மக்கள் உண்பதற்கு போதுமான முட்டை கூட இல்லாத நிலை நீடிக்கிறது என்றால் எத்தகைய மோசமான ஆட்சியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மலேசியர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

மக்களின் வருமானம் உயர்ந்தபாடில்லை. ஆனால் பொருட்களின் விலை மட்டும் உயர்ந்துக் கொண்டே போகிறது. வாங்கும் சக்தியை இழந்த நிலையில் மலேசியர்கள் உள்ளனர். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை முதலில் உணர வேண்டும்.

மக்களுக்காக சிந்தித்து செயல்படும் தலைவர்களை நாம் கொண்டிருக்காததே அதற்கான முதல் காரணம். 70 ஆயிரம் வெள்ளிக்கு மேல் மாத வருமானம் பெறும் ஒரு பிரதமரால் சாதாரண மக்களின் வாழ்வியலை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?

ஊழல், லஞ்சம் பெறும் ஒரு தலைவனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வாறு முன்னேற்றத்தை கொண்டு வர முடியும்?

சாமானிய மக்களின் வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டுமானால் தலைமைத்துவ மாற்றம் நிச்சயம் நிகழ்ந்தே தீர வேண்டும். ஆட்சி மாற்றத்தின்  வழியே தங்களுக்கான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள மக்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயாவை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றும்போது நிச்சம் அந்த அற்புதம் நிகழ்ந்தே தீரும் என்று அம்பாங் ஜெயா மாநகர் மன்ற திடலில் நிகழ்ந்த பிகேஆர் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய போது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

Leave a Reply