முட்டை தட்டுப்பாடு : வெளிநாட்டு இறக்குமதி தற்காலிகத் தீர்வே ! – மாட் சாபு

Business, Economy, Local, Malaysia, News

 27 total views,  2 views today

குமரன் | 16-1-2023

உள்நாட்டுத் தேவையை ஈடுகட்ட இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் முன்னெடுப்பு தற்காலிகத் தீர்வே என வேளாண்மை – உணவு உறுதிப்பாடு அமைச்சர் முகம்மது சாபு தெரிவித்தார்.

உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப சந்தையில் முட்டைகளின் இருப்பு சரியாகி விடும் வரையில் மட்டுமே இறக்குமதி தொடரப்ப்படும் என அவர் மேலும் சொன்னார்.

உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப உள்நாட்டு உற்பத்தியாளர்கள் முட்டைகளைத் தயாரிப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அவர் சொன்னார்.

முன்னதாக, ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தொ ஶ்ரீ வீ கா சியோங் கூறியிருந்தது போல இந்த முன்னெடுப்பு வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நடவடிக்கை அல்ல எனவும் உணவுத் தட்டுப்பாடுக்கான நடவடிக்கையென அவர் தெளிவுபடுத்தினார்.

முட்டைகளின் உற்பத்தியை அதிகப்படுத்த அமைச்சும் முட்டைகளின் உற்பத்தியாளர்களும் கலந்து பேசிக்கொண்டு இருப்பதாகவும் உற்பத்தியாளர்களின் உதவித் தொகை மறு ஆய்வு செய்யப்படுவதற்கான ஆலோனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முட்டைகளின் விலையை அதிகரித்து அந்த இலாபத்தில் உற்பத்தியை அதிகரிக்க விநியோகிப்பாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம், பி40 தரப்பு மக்களுக்கு முட்டை வாங்குவதற்கான உதவித் தொகௌ கொடுப்படுவது குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன. அவையும் கருத்தில் கொள்ளப்பட்டு பரிசீலனையில் இருக்கின்றன.

இந்த விவகாரம் தீர்க்கப்பட பல முனைகளில் இருந்து பலதரப்பட்ட கருத்துகள் பெறப்பட்டு வருவதாக அவர் மேலும் விளக்கமளித்தார்.

Leave a Reply