முதன்மை அமைச்சர் தொகுதி அந்தஸ்த்தை இழக்க வேண்டாம்- மணிமாறன்

Malaysia, News, Politics

 163 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வெற்றி பெற்றார் முதன்மை அமைச்சர் பதவியை பெறுவார். சுங்கை சிப்புட்டிற்கு ஓர் அமைச்சர் அந்தஸ்து கிடைக்கும் என்பதால் வாக்காளர்கள் இத்தேர்தலில் தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இத்தொகுதி மஇகா தலைவர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர்  ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளர். 2008ஆம் ஆண்டு தேர்தலின்போது துன் சாமிவேலு  தோல்வி அடைந்த பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக அமைச்சர் அந்தஸ்த்தை சுங்கை சிப்புட் இழந்துவிட்டது.

19ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியே புத்ராஜெயாவை கைப்பற்றும் எனும் நிலையில் மஇகாவின் தேசியத் தலைவராகவும் இருக்கக்கூடிய டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நிச்சயம் முதன்மை அமைச்சராகவும் பதவியேற்க வாய்ப்புள்ளது.

ஆதலால் சுங்கை சிப்புட் வாக்காளர்கள் நமது வருங்காலத்தை வருங்கால சந்ததியினரையும் சிந்தித்து தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply