முதலையை விடுத்து நெத்திலிக்கு வலை விரிப்பா?

Uncategorized

 157 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்,அக்.29-

மித்ரா மானிய நிதி முறைகேடு தொடர்பில் முதலைகளை பிடிக்காமல் நெத்திலிகளுக்கு எம்ஏசிசி வலை விரிக்கிறது என்று மலேசிய முன்னேற்ற கட்சியின் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி சாடியுள்ளார்.

தம் மீது குற்றச்சாட்டை முன்வைத்த ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா சித்திக்கை விசாரிக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆணையத்தில் புகார் அளித்தேன். இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட வெ.85 மில்லியன் நிதி என்னவானது? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் அவர் நழுவிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் வெ.85 மில்லியன் நிதிக்கு பதிலளிக்க வேண்டிய ஹலிமாவை விடுத்து வெ.1 லட்சம், வெ.2 லட்சம் என்று நிகழ்ச்சிகளுக்கு மானியம் பெற்றுக் கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து உண்மையை திசை திருப்பும் முயற்சி அரங்கேற்றப்படுகிறதா? என்று முன்னாள் ஒற்றுமை துறை அமைச்சருமான வேதமூர்த்தி வினவினார்.

ஐ-சேனல் மின்னியல் நாளிதழை படிக்க…

மித்ரா மானியத்தை அரசியல் கட்சியின் அதிகார பலமிக்கவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை சுட்டிக் காட்டிய வேதமூர்த்தி, மித்ரா மானிய நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முதலைகளுக்கு எம்ஏசிசி வலை விரிக்க வேண்டும்.

அதை விடுத்து நெத்திலிகளை விசாரணைக்கு அழைத்து வந்து இவ்விவகாரத்தை திசை திருப்ப முயற்சிக்கக்கூடாது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

Leave a Reply