முதல் சம்பளத்தை மீனவர்களுக்கு வழங்குவேன் – டத்தோஶ்ரீ தனேந்திரன்

Uncategorized

 108 total views,  1 views today

நிபோங் திபால்-

நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமது முதல் மாதச் சம்பளம் லைசென்ஸ் உடைய சுங்கை ஊடாங், சுங்கை செனாம் கிராம மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று அத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கிராம மீனவர்களுக்கு ஒரே தவணையாக வெ.1,000 வழங்கப்படும். நான் மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டவர். ஏனெனில் நான் ஓர் ஆசிரியர், என்னால் வெற்று வாக்குறுதிகளை வழங்க முடியாது.

என்னை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தால் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

Leave a Reply