முதல் மாச சம்பளத்த வேறு ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பெண் ! – கண் கலங்க வைக்கும் பதிவு

Malaysia, News

 76 total views,  3 views today

– குமரன் –

ஷா ஆலாம் – 6 செட்டம்பர் 2022

பொதுவாக ஒருவருக்கு வேலைக்கு கிடைத்த பிறகு கிடைக்கும் முதல் மாத ஊதியம் என்பது மிக மிக முக்கியமானதாகும். மறக்க முடியாததாகும். அந்த சம்பளத்தின் மூலம் தனது பெற்றோர்கள் அல்லது மிகவும் நெருக்கமான நபர்களுக்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால், பெண் ஒருவர் தனக்கு முதல் மாத சம்பளம் கிடைத்ததும் அவர் தவறுதலாக செய்த செயலால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில், இயங்கலை வழி பணத்தை பரிமாற்றம் செய்யும் வழக்கம் என்பது ஏராளமான மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், பெண் ஒருவர் செய்துள்ள பண பரிமாற்றம் தொடர்பான செயல்தான், தற்போது சற்று பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

ஷா ஆலாமைச் சேர்ந்தவர் நோர் ஃபஹாடா முகம்மட் பிஸ்தாரி. இவர் சமீபத்தில் டிக் டாக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது முதல் மாத சம்பளத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தனது தாயின் வங்கி கணக்கிற்கும் இயங்கலை மூலம் அனுப்ப முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் தான் கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்குக் காத்திருந்தது. அதாவது, தாயின் வங்கி கணக்கில் அனுப்புவதற்குப் பதிலாக, முன்பின் தெரியாத ஒரு நபரின் வங்கி கணக்கில் நோர் ஃபஹாடா பணத்தை அனுப்பி உள்ளார். முதல் மாத சம்பளம் கிடைத்த உற்சாகத்தில் இருந்த நோர் ஃபஹாடா, சரியாக கவனிக்காமல் இந்த தவறினை செய்ததாகவும் தமது டிக்டோக் காணொலியில் குரிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், சம்மந்தப்பட்ட நபரின் தொடர்பு எண்களும் நோர் ஃபஹாடாவுக்கு கிடைத்துள்ள நிலையில், அதற்கு அழைத்து பணம் தவறுதலாக வந்த விவகாரத்தை விவரித்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபரோ ஒரு நன்கொடையாக நினைத்துக் கொண்டு விட்டு விடவும் கூறி உள்ளார். இதனால் மனம் நொந்து போன நோர் ஃபஹாடா, இது தொடர்பான வீடியோ ஒன்றையும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

தனக்குக் கிடைத்த சம்பளம் சற்று குறைவாக இருந்ததாகவும் அதனை தாய்க்கு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணீருடன் கூறி உள்ளார். மேலும், இந்த சம்பவத்தால் தான் ஒரு சிறந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும் நோர் ஃபஹாடா குறிப்பிட்டிருந்தார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் பாதிக்கப்பட்டப் பெண்ணின் நிலையை எண்ணி, பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், வங்கி கணக்கில் பணம் அனுப்பும் போது கவனத்துடன் அனுப்ப வேண்டும் என்றும் ஃபஹாடா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply