முதியவர் மரணத்திற்கு சுகாதார அமைச்சரின் நடவடிக்கை என்ன? பி.இராமசாமி

Crime, Health, Malaysia, News

 230 total views,  2 views today

பட்டர்வொர்த்-

கோவிட்-19 தொற்றால் சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தட்டு தடுமாறி கீழே விழுந்து மரணமுற்ற காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரின் கண்டனங்களை பெற்று வருகிறது.


இந்நிலையில் புதிய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கைரி ஜமாலுடின், இவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி வலியுறுத்தினார்.


அந்த முதியவர் கீழே விழுந்து சில நிமிடங்கள் அப்படியே கிடக்கிறார். அப்படியென்றால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை என்னவானது? சம்பந்தப்பட்ட அறையில் தாதியர் யாருமே இல்லையா? அல்லது அவரை காப்பாற்ற முடியாது என்ற அஜாக்கிரதையில் கைவிடப்பட்டாரா? என்று பல கேள்விகளை இராமசாமி முன்வைத்தார்.


இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கெடா மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஒத்மான் வரிஜோ பதவி விலக வேண்டும். அதோடு தமது கடமையில் அலட்சியம் காட்டிய பணியில் இருந்தவர்களும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று இராமசாமி குறிப்பிட்டார்.

Leave a Reply