முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள், பொது இயக்கங்களுக்கு வெ.17 லட்சம் மானியம் வழங்கப்பட்டது- கணபதிராவ்

Malaysia, News, Politics

 205 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

பரிவுமிக்க அரசாங்கம் எனும் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள  அன்பு இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் மையங்கள்,சிறார் பராமரிப்பு மையங்கள், சிறந்த முறையில் சேவையாற்றும் பொது இயக்கங்கள் ஆகியவற்றுக்கான மானியம் வழங்கப்பட்டது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

17 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் 51 இல்லங்களுக்கு மேம்பாட்டுக்காகவும், 17 இல்லங்களுக்கு செயல் நடவடிக்கைகளுக்காகவும் 17 இயக்கங்களுக்கு அவர்களின் முந்தைய செயல் நடவடிக்கை செலவீனங்களுக்காவும் இந்நிதி வழங்கப்பட்டது. எஞ்சிய 3 லட்சம்  வெள்ளி பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்களுக்கு வெகு விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

2020க்கு முன்னர் இதுபோன்ற திட்டங்கள் கிடையாது. அப்போது ஒவ்வோர் இயக்கங்களுக்கும் வெ. 5,000 வரைக்குமான மானியங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

நான் தற்போது நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவதால் ஆட்சிக்குழு உறுப்பினராக நீடிக்க முடியாது. தமக்கு பின்னர் ஆட்சிக்குழு உறுப்பினராக வருபவர்கள் தற்போது மாநில அரசாங்க  முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply