முதுகில் குத்திவிட்டு ஆதரவு கோருகிறார் முஹிடின் – மகாதீர் தாக்கு (Video News)

Malaysia, News, Politics

 244 total views,  1 views today

கோலாலம்பூர்-

மீண்டும் பிரதமராவதற்கு டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தமது ஆதரவை  கோரியிருந்தார் என்றூ முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது கூறினார்.

முஹிடின் ஏன் தனது ஆதரவைக் கேட்டார் என்று தெரியவில்லை? பெஜுவாங் கட்சி வலுவாக இல்லை, எங்களிடம் பணம் இல்லை. ஆனால் ஆதரவை வழங்கும்படி அவர் எங்களிடம் கேட்டிருந்தார்.

இந்த விஷயத்தில் பெஜுவாங் கட்சி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இதில் உடன்பாடு இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

முஹிடினுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முஹிடினால் நான் பிரதமராகவில்லை. ஆனால் அவர் என் முதுகில் குத்தினர். இப்போது அவர் முதுகில் பலர் குத்தியுள்ளனர்.

பிரதமராக முஹிடினின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்றும் ஆதரவை பெறுவதற்கு தகுதியானவர் அல்ல என்றும் மகாதிர் குறிப்பிட்டார்.

அவர் பிரதமராக இருந்தபோது அவரது தலைமையின் மீது பலர் அதிருப்தியில் இருந்தனர்.  அவர் நாட்டுக்கு நல்லது செய்திருந்தால் என் ஆதரவு இல்லாமலேயே அவர் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்.

நஜிப்பை போன்று பல தோல்விகளை கொண்ட ஒரு பிரதமரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று துன் மகாதீர் சொன்னார்.

Leave a Reply