முன்கூட்டியே தேர்தலா ? மூன்று விவகாரங்கள் மீது அமைச்சரவை கவலை ?

Malaysia, News, Politics, Polls

 97 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 24 செப் 2022

இவ்வாண்டு 15வது தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அமைச்சரனை மூன்று முக்கிய விவகாரங்கள் மீது கவலை கொள்வதாக நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

புத்ராஜெயாவை மையமாகக் கொண்டிருக்கும் அந்த நம்பத்தகுந்த வட்டத்தின் தகவல்படி, வெள்ளப் பிரச்சனையைத் தவிர்த்து, வேறு சில காரணங்கள் இருப்பதாகத் தெரிவிப்பதோடு இவ்வாண்டே தேர்தலுக்கு வழிவிட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, 6 மாநிலங்கள் தங்களின் சட்டமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

அனைவரும் அறிந்த பெரும் சிக்கலான வெள்ளப் பிரச்சனை குறித்து தெரிவித்த அந்தத் தரப்பு, கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் தேர்தல் நடத்த முடியாது எனவும் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தையக் காலங்களில், கிளாந்தான் , திரங்கானு ஆகிய மாநிலங்களில் மட்டுமே பெருவெள்ளம் ஏற்பட்டது. ஆனால், கடந்த ஆண்டோ உயிர்பலி ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமான வெள்ளம் சிலாங்கூர் மாநிலத்தைத் தாக்கியது.

“வாக்காளர்களின் போக்குவரத்தையும் தாண்டி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன படகையா பயன்படுத்த முடியும் ?”

இதனிடையே, கடந்த அறிவன் (புதன்) கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கும் அந்த நம்பத் தகுந்தத் தரப்பு, 15வது பொதுத் தேர்தல் குறித்து அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதையும் உறுதிப்படுத்தியது.

ஆனால், அந்த விவாதம் விரிவாக நடத்தப்படவில்லை எனவும் பெரும்பான்மையாக, வெள்ளப் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“இன்னும் பொதுத் தேர்தலுக்கானத் தேதி முடிவாகவில்லை”

முன்னதாக, அம்னோ தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடியின் வலியுறுத்தலுக்குப் பிறகு, 15வது பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோடி காட்டி இருந்தார்.

அதற்கும் முன்னதாக, இந்தத் தவணை முடிவுறும் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு விடும் எனவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருந்தார்.

இதர செய்திகள்
கேமரன் மலை உட்பட 12 இடங்களைக் குறி வைக்கும் ம.இ.கா. ?
பொதுத் தேர்தல் தேதி : அமைச்சரவையில் இரு அணிகளா ?

வானிலையைத் தொடர்ந்து 6 மாநிலங்கள் தங்களின் சட்டமன்றத்தைக் கலைக்க ஒப்புக்கொள்ள வில்லை என்பதையும் தகவல் அளித்த நம்பத்தகுந்த அந்தத் தரப்பு குறிப்பிட்டது.

அவ்வாறூ மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட வில்லை என்றால், அந்த மாநிலங்களுக்குத் தனியாக நடத்தப்படும் தேர்தலுக்குச் செலவு அதிகரிக்கும் எனவும் அது பொதுத் தேர்தல் செலவை இரண்டு மடங்காக்கி விடும் எனவும் குறிப்பிட்டது.

“இதனாலும், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட சில அமைச்சர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.”

முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தினால், தங்கள் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படாது என கெடா, பினாங்கு, கிளாந்தான், திரங்கானு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கெடா, கிளாந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களை மத்திய அரசில் ஒரு பகுதியாக இருக்கும் பாஸ் கட்சி தனது ஆட்சியில் வைத்துள்ளது. சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.

மூன்றாவதாக, அரசு கவனிப்பது கட்சித் தாவல் தடுப்புச் சட்டம்.

மத்திய அரசு சிலையில் இந்தச் சட்டம் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு விட்டாலும்கூட, மாநில நிலையில் அஃது இன்னும் நடப்புக்கு வரவில்லை.

எனவே, மாநில நிலையிலானத் தேர்தலின்போது கட்சித் தாவல் நாடகங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்னர் இந்த விவகாரங்கள் தீர்க்கப்பட சில பரிந்துரைகளும் முனைக்கப்பட்டுள்ளன.

எனவே. கட்சித் தாவல் நாடகங்கள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன. பொதுத் தேர்தலுக்கு முன்னர் இந்த விவகாரங்கள் கையாளப்பட சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜூலை 28 ஆம் நாள் நாடாளூமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நடக்கும் கட்சித் தாவலைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் விட்டது.

மூன்றாம் முறை வாசிப்பில் அது அங்கீகரிக்கப்பட்டு விட்டாலும் கூட, அச்சட்டம் முழுமையாக இல்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், எல்லா மாநிலங்களும் தனித்தனியே மாநில நிலையிலான சட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.

விளம்பரம்

Leave a Reply