முவாஃபாக்காட் நேஷனலை மீண்டும் புதுப்பிக்க பாஸ் கட்சியை அம்னோ அழைத்ததில்லை ! – ஸாஹிட்

Malaysia, News, Politics, Polls

 133 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10/10/2022

மூவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க பாஸ் கட்சியை அம்னோ அழைத்ததில்லை என அம்னோ கட்சித் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் தலைவருமான அவர் இவ்விவகாரம் குறித்து பேசுகயில், எதிர்வரும் 15 வது பொதுத் தேர்தலில் ஒன்றாய் இணைந்து எதிர்கொள்ள எந்தவிதமானப் பேச்சுவார்த்தையையும் நடத்தியது இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்குத்தான் இந்த விருப்பம் இருந்ததாகவும் அவர்களே வந்து இவ்விவகாரம் தொடர்பில் பேசி இருந்ததாகவும் ஸாஹிட் சொன்னார்.

யாரையும் நாங்கள் விரட்டியதும் இல்லை. விட்டுச் சென்றவர்களை நாங்கள் அழைத்ததும் இல்லை என இன்று நடந்த ம.இ.கா. தேசியப் பொதுப் பேரவையில் உரையாற்றிய ஸாஹிட் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் எதிர்காலத்தைக் கருதி அக்கூட்டணியிலேயே தொடர்ந்து நிலைத்திருக்கும் கட்சிகளையே அது தேர்ந்தெடுக்கும் எனக் கூறினார்.

அம்னோ , பெர்சத்து ஆகியக் கட்சிகளுடன் இணைந்து முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க வேண்டு என கடந்த சனிக்கிழமை நடந்த பாஸ் கட்சியின் செயற்குழு சந்திப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply