முஸ்லீம் அல்லாதோரின் சடலங்களை அடக்கம் செய்ய வெ. 1 மில்லியன் ஒதுக்கீடு

Malaysia, News

 141 total views,  3 views today

கோலாலம்பூர்-

கோலாலம்பூர் மருத்துவமனையில் கோரப்படாத உள்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் அல்லோதோரின் சடலங்களை அடக்கம் செய்யும் பொருட்டு ஒற்றுமை துறை அமைச்சு, வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சுடன் இணைந்து 1 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்தியர் சடலங்களை நிர்வகிப்பதற்காக 5 லட்சம் வெள்ளி இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் வழங்கப்படும் என்றும் சீனர் சடலங்களை அடக்கம் செய்ய 5 லட்சம் வெள்ளி கம்போங் பாரு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று ஒற்றுமை துறை அமைச்சு கூறியுள்ளது.
பி40 பிரிவைச் சேர்ந்த தரப்பினர் தங்களது உறவினர்களின் சடலங்களை அடக்கம் செய்வத்ற்கு நிதிச்சுமையை எதிர்நோக்குவதே சடலங்களை அடக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது என்று அவ்வமைச்சு கூறியது.

Leave a Reply