மெட்டி ஒலி தொடர் புகழ் உமா மகேஷ்வரி மரணம்

India, News

 202 total views,  1 views today

சென்னை

மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 40.
2002ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் பிரபலமானது ஆகும்.

இத்தொடரில் சிதம்பரத்தின் 4ஆவது மகளாக, திருமுருகனின் மனைவியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் உமா.

இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து ‘வெற்றி கொடி கட்டு’, அல்லி அர்ஜுனா, உன்னை நினைத்து போன்ற திரைப்படங்களிலும் நடித்தார்.

திருமணத்திற்கு பின்னர் தொடர்களில் நடிக்காமல் இருந்த உமா, சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். சிகிக்சை பெற்று குணமான உமா, பின்னர் மறுபடியும் மஞ்சள் காமாலைக்கு பாதிக்கப்பட்டார்.
அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார்.

ஐ-சேனல் E-Paper-ஐ படிக்க கீழே கிளிக் செய்யவும்

Leave a Reply