மைபிபிபி இன்னமும் சுயேட்சை கட்சியே- டான்ஸ்ரீ கேவியஸ்

Malaysia, News

 316 total views,  1 views today

கோ.பத்மஜோதி


கோலாலம்பூர்,அக்.31-
மைபிபிபி கட்சி யாரையும் சார்ந்திராத ஒரு சுயேச்சை கட்சியாகவே இன்னமும் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அதான் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

2018இல் தேமு கூட்டணியிலிருந்து விலகிய மைபிபிபி இன்னமும் நடுநிலை கட்சியாகவே இருக்கிறது.


ஆயினும் மத்தியில் உள்ள நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மைபிபிபி கட்சி இவரை ஆதரிக்கிறது, அவரை ஆதரிக்கிறது என பல கருத்துகள் நிலவினாலும் நடுநிலைப் போக்கையே இக்கட்சி கொண்டிருக்கிறது என்று டான்ஸ்ரீ கேவியஸ் கட்டடத்தின் அருகே நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஸ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

Leave a Reply