
மைபிபிபி கட்சிக்கு நானே தலைவர்- டான்ஶ்ரீ கேவியஸ்
468 total views, 1 views today
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் நானே என்பதை சங்கங்களின் பதிவிலாக (ஆர்ௐஎஸ்) அங்கீகரித்துள்ளது. இனியும் இக்கட்சியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் எத்தரப்பும் முனைய வேண்டாம் என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அதிரடியாக அறிவித்தார்.
கடந்த 2018இல் இக்கட்சியில் இருந்த சில தரப்பினர் கட்சியின் தலைமைத்துவத்தை அபகரித்துக் கொள்வதாக அறிவித்துக் கொண்ட நிலையில் நான்காண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில் இக்கட்சிக்கு நானே தலைவர் என்பதை ஆர்ஓஎஸ் இறுதியாக அறிவித்துள்ளது.
இனியும் கட்சியில் உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் குழப்பம் அடைய வேண்டாம்.
கட்சியில் நீடித்த உட்கட்சி பூசலால் கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் முழு கவனம் செலுத்த முடியாமல் பல வாய்ப்புகளை இழந்து விட்டோம்.
கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இனியும் கட்சிக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப விரும்பினால் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமாதான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முற்படலாம் எனவும் அதற்கு கட்சியின் தலைமைத்துவம் அனுமதி வழங்கி உள்ளது எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.