மைபிபிபி கட்டடம் கட்சி உறுப்பினர்களுக்கே சொந்தமானது- டத்தோஶ்ரீ மெக்லின்

Malaysia, News, Politics

 374 total views,  2 views today

பூச்சோங்-
மைபிபிபி கட்சியின் கட்டடத்தை தனி நபர் யாரும் அபகரித்து விட முடியாது. அது கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ மிக்லின் டி குரூஸ் தெரிவித்தார்.
ஜாலான் கம்போங் அத்தாப்பில் அமைந்துள்ள அக்கட்டடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அக்கட்டடத்தின் 100,000 லட்சம் பங்குகளை திவால் துறையிடம் ஒப்படைக்கும்படி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டடத்தை தவறான முறையில் விற்க தடை செய்யும் வகையில் அத்தீர்ப்பு அமைந்துள்ள நிலையில் அந்த கட்டடத்தை சொந்தம் கொண்டாட டான்ஶ்ரீ எம்.கேவியசுக்கு உரிமை கிடையாது.

மைபிபிபி கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக டான்ஶ்ரீ கேவியஸ் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் கட்சி தலைவர் எனும் முறையில் எவ்வித முடிவையும் அவர் எடுக்க முடியாது.
அதேவேளையில் கட்சியின் பதிவை கடந்த 14/1/2019இல் சங்கங்களின் பதிவிலாகா ரத்து செய்த நிலையில் அவரும் நானும் தனித்தனியே நடத்திய உயர்மட்ட குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சி பதிவு ரத்து செய்யப்பட்டதையே மறைத்து நடத்தப்பட்ட உயர்மட்ட குழு கூட்டத்தில் டத்தோ சந்திரகுமணன், டத்தோ லாய் கிம் சியாங் ஆகியோரை கட்சியின் உயர்மட்ட குழுவில் நியமித்தது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது.

இதன் ஓர் அங்கமாக Bintang Iradat நிறுவனம் வசமிருந்த மைபிபிபி கட்டடத்தை பல்வேறு சதிராட்டங்கள் செய்து கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றிவிடும் வேலையை டத்தோ சந்திரகுமணனும் டத்தோ லாய்-வும் மேற்கொண்டுள்ளனர்.
மைபிபிபி கட்சி முதலீட்டு நிறுவனமாக 2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Bintang Iradat நிறுவனத்தின் பங்குதாரராக நான், டத்தோ மோகன், டத்தோ லாவ் பெங் லாய் ஆகியோர் இருந்தோம்.
அதன் பின்னர் தன்னுடைய பெயரில் இருந்த 70,000 பங்குகளை சங்கர் கந்தசாமி பெயரிலும் டத்தோ மோகன் கந்தசாமி பெயரில் இருந்த 15,000 பங்குகளை குமாரராஜா ஆறுமுகம் பெயரிலும் மாற்றப்பட்டது செல்லுபடியாகாது.
அவ்வாறு பங்குகள் மாற்றப்பட்டு பின்னர் கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு அக்கட்டடம் மாற்றப்பட்டதையும் ஏற்க முடியாது.
கட்சியின் சொத்துகள் அனைத்தும் உறுப்பினர்களுக்கே சொந்தமானதாகும். அதன் அடிப்படையில் மைபிபிபி கட்டடமும் கட்சி உறுப்பினர்களுக்கு சொந்தமானதாகும். அதனை தனிநபர்கள் அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.கந்தசாமி பெயரில் இருந்த 15,000 பங்குகளை குமாரராஜா ஆறுமுகம் பெயரிலும் மாற்றப்பட்டது செல்லுபடியாகாது.
அவ்வாறு பங்குகள் மாற்றப்பட்டு பின்னர் கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு அக்கட்டடம் மாற்றப்பட்டதையும் ஏற்க முடியாது.
கட்சியின் சொத்துகள் அனைத்தும் உறுப்பினர்களுக்கே சொந்தமானதாகும். அதன் அடிப்படையில் மைபிபிபி கட்டடமும் கட்சி உறுப்பினர்களுக்கு சொந்தமானதாகும். அதனை தனிநபர்கள் அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Leave a Reply