யாரும் விதைத்து காடு உருவாகவில்லை ! எல்லாம் கடவுள் விளைவித்தார் ! – சனுசி

Malaysia, News

 82 total views,  1 views today

அலோர் ஸ்டார் – 14 ஆகஸ்டு 2022

பாலிங்கில் உள்ள இனாஸ் மலையில் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீண்டும் தாவரங்களை நட கெடா மாநில அரசுக்கு எண்ணம் இல்லை என அம்மாநில முதல்வர் முகம்மட் சனுசி முகம்மட் நோர் தெரிவித்தார்.

மரங்களை வெட்டிய பிறகு 30 ஆண்டுகளில் மீண்டும் காடாக மாறிவிடும் என அவர் மேலும் சொன்னார்.

“மரங்களும் செடிகளும் தானாகவே வளரும். விதை விதைத்து கெடா மாநிலக் காட்டை யாரும் உருவாக்கவில்லை. எல்லாம் கடவுள் விளவித்தார். ஆகையால், காட்டை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது.”

“அப்பகுதியை எப்படி சீர் செய்தாலும் அது தற்போது நீர் வழித் தடமாகி விட்டது. எதிர்காலத்திலும் அது நீர் வழித்தடமாகவே இருக்கும்.”

நீர் வழித்தடமாக அப்பகுதி மாறிவிட்டால், அஃது அப்படித்தான் இருக்கும். இனாஸ் மலையைப் போல் மகாங், திரங்கானு, போன்ற பல மாநிலங்களில் பல காடுகள் இருக்கின்றன. ஆனால், ஊடகங்களின் கவனம் இனாஸ் மலை மட்டும் நோக்கி இருக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 4 ஆம் நாள் இனாஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் குறித்தும் பாதிக்கப்பட்டப் பகுதியை சீர் செய்யும் நடவடிக்கை குறித்தும் சனுசியிடம் கேட்கப்பட்டது.

அந்த வெள்ளப் பேரிடரில் கற்பினி பெண் உட்பட 12 பேரின் உயிரிழந்ததுடன் பாலிங்கில் இருக்கும் 12 கிராமங்களும் பாதிப்படைந்தன.

Leave a Reply