ரஷியாவுக்கு எதிராக போராட அமெரிக்கப் படைகளை அனுப்பாது- ஜோ பைடன்

News, World

 116 total views,  1 views today

நியூயார்க்-

ரஷியப் படைகளை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்புவதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக நிராகரித்தார். 

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கூட்டு பதிலடியை கொடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பைடன்,  ரஷியாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தார். 

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நான்கு பெரிய ரஷிய வங்கிகளின் சொத்துக்களை முடக்கும் என்றும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என்றும் பைடன் தெரிவித்தார். 

புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும், போரைத் அவர் தேர்ந்தெடுத்தார் என்றும், அதன் மூலம் அவரும், ரஷியாவும் பொருளாதார தடைகளின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் பைடன் குறிப்பிட்டார்.

Leave a Reply