ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக பொங்கிய பொதுமக்கள்

News, World

 192 total views,  5 views today

கொழும்பு-

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஒருபுறம் விலைவாசி உயர்வு, மறுபுறம் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையின் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம்தான் நடந்து வருகின்றன. தற்போது இலங்கை மக்களின் கோப பார்வை ராஜபக்சே குடும்பத்தினர் மீது திரும்பி உள்ளது. நுகே கொட பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கலந்து கொண்டனர்.

Leave a Reply