ரூ.100 கோடியை தொட்ட ‘டான்’

Cinema, India, News

 299 total views,  4 views today

சென்னை-

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் ‘டான்’ திரைப்படத்தின் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படம் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply