ரோஸ்மா ஊழல் – கையூட்டு வழக்கு : இன்றைய நிலவரம்

Crime, Malaysia, News, Politics

 76 total views,  3 views today

கோலாலம்பூர் – 1 செப்தெம்பர் 2022

பிற்பகல் மணி 2.55 : ரோஸ்மா மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றங்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் மணி 2.45 : ரோஸ்மாவின் வழக்கில் இருந்து நீதிபதி விலக்கப்பட வேண்டும் எனும் அவரது விண்ணப்பம் தள்ளுபடியானது.

முற்பகல் மணி 11.39 : ரோஸ்மாவின் மகள் நோர்யானா வழக்காடும் அறையில் நுழைந்தார்.

காலை மணி 10.32 : வழக்கம் போல் விசாரணை தொடர்ந்தது.

காலை மணி 10.02 : ரோஸ்மாவின் மகன் நோராஷ்மான் வழக்காடும் அறையில் நுழைந்தார்.

காலை மணி 9.44 : ரோஸ்மா தரப்பு வாதத்தை தொடங்க்ஜ நீதிமன்றம் கட்டளை

வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் வழக்கை ஒத்திவைக்கவும் அரசு தரப்பு வழக்கறிஞர் போ யி தின் உறுதிப்படுத்திய வாக்குமூலத்திற்குப் பதிலளிக்க கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார். அதனை அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஶ்ரீ ராம் எதிர்க்கவும் தயாராக இருந்தார்.

காலை மணி 9.23 : வழக்கு தொடங்கியது. இந்த வழக்கில் இருந்து நீதிபதி முகம்மட் ஸைனி மஸ்லான் விலக வேண்டும் என ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜித் சிங்கோரினார்.

காலை மணி 9.09 : உயர்நீதிமன்றத்தில் விசாசிக்கப்படும் இவ்வழக்கின் அறை நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரால் நிரம்பி இருந்தது. சிறப்பு அனுமதி அட்டையுடன் இருப்பவர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

காலை மணி 8.54 : டத்தின் ஶ்ரீ ரோஸ்மான் மன்சோன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வந்தார்.

காலை மணி 8.38 : அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஶ்ரீ கோபால் ஶ்ரீ ராம் வழக்கு மன்றத்திற்கு வந்தடைந்தார்.

காலை மணி 8.00 : கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகம் ஊடகவியலாளர்களால் நிரம்பி இருந்தது.

Leave a Reply