ரோஸ்மா குற்றவாளியே ! – 30 ஆண்டுகள் சிறையும் ரிம 970 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டன !

Crime, Malaysia, News, Politics

 78 total views,  1 views today

கோலாலம்பூர் – 1 செப்தம்பர் 2022

சரவாக் மாநிலத்தில் இருக்கும் 369 புறநகர் பகுதிகளில் உள்ளப் பள்ளிகளில் ரிம 1.25 பில்லியன் மதிப்பிலான சூரிய சக்தி மின்சாரத் திட்டம் தொடர்பில் 3 குற்றங்கள் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மூன்று குற்றங்கள் அவர் மீது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்து ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரிம 970 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், மூன்று தண்டனைகளும் ஒரே நேரத்தில் அவருக்கு விதிக்கப்படுவதால் அவர் 10 ஆண்டுகள் மட்டுமே சிறையில்ன் இருப்பார் என நீதிபதி முகம்மட் ஸைனி மஸ்லான் தெரிவித்தார்.

அதே சமயம், ரோஸ்மா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது விண்ணப்பதைச் செய்திருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.

Leave a Reply