லிம் கிட் சியாங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது

Malaysia, News

 202 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட எஸ்ஓபி நடைமுறைகளை மீறியதற்காக இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கிற்கு சுகாதார அமைச்சு அபராதம் விதித்தது.
லிம் கிட் சியாங்கிற்கு கடந்த 20ஆம் தேதி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஏபி-யின் 17ஆவது பொது பேரவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களை கட்டிப்பிடித்தற்காக லிம்முக்கு ஏன் அபராதம் விதிக்கப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தமது டுவிட்டரில் பதிலளித்த கைரி, லிம்முக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளது. ஜோகூர் தேர்தலின்போது வழங்கப்பட்ட அபராத்திற்கு நஜிப் பணம் செலுத்துவார் என்று நம்புகிறேன். அது இன்னும் தீர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply