லிம் கிட் சியாங்கிற்கு கோவிட் தொற்று உறுதி

Malaysia, News

 216 total views,  3 views today

கோலாலம்பூர்-

ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட RTK பரசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரின் அர்சிய செயலாளர் Syahredzan Johan தெரிவித்தார்.

லிம் தடுப்பூசியும் ஊக்க மருந்தையும் எடுத்துக் கொண்டுள்ளார். ஆயினும் அவருக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. தற்போது லிம் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளார் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று நடைபெற்ற ஜசெகவின் 17ஆவது பொதுப் பேரவையில் கலந்து கொண்ட லிம் கிட் சியாங் , அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply