லிம் குவான் எங்கின் சாதனையை பட்டியலிடலாமா?- ராய்டு

Malaysia, News, Politics

 411 total views,  1 views today

ஷா ஆலம்-

சமூக ஊடகங்களின் வாயிலாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மீதான தாக்குதலை சில இணையதாக்குதல்தாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் 32 வினாடிகள் ஓடக்கூடிய காணொளியில் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இந்திய சமுதாயத்திற்காக எதுவும் செய்யவில்லை  எனும் காணொளியை பார்க்க நேர்ந்த்து.

பக்காத்தான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இணைய தாக்குதல்தாரிகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. நாம் மலேசியர்கள் எனும் அடிப்படையில்  பினாங்கு மாநில பிஎச் அரசு, பிஎச் அரசாங்கத்தால் இந்திய சமூகத்திற்கு உறுதி அளித்து வழங்கியதை பட்டியலிடவோ அல்லது ஒப்பிடவோ முடியும் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராயுடு பட்டியலிட்டுள்ளார்.

1.கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்

2. வெறும் 10 வெள்ளியில்  கலிடோனியா தோட்ட மக்களுக்கு வீடுகள்

3. பினாங்கில், நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி போன்று பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில்  பல செயல்பாட்டு நோக்கங்களுக்காக மாநில அரசு  திறந்த அரங்குகளை அமைத்துள்ளது.

4. தமிழ் பள்ளிகளுக்கான கணினி மற்றும் மின்னணு சாதனங்கள் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது.

5. பினாங்கு மாநிலத்திலுள்ள ஏழை மாணவர்களுக்கு  உயர் கல்வி மானியங்கள்.

6. நிபோங் திபால், லாடாங் சுங்கை கெச்சிலில்  தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டம்.

7. பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளி, கோவில் நிலம் தொடர்பான பல பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்துள்ளது.

8. ஆண்டுதோறும், பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக RM 1.7 மில்லியனை ஒதுக்குகிறது, இது முந்தைய அரசாங்கத்திடமிருந்து இது போன்ற எதையும் நாங்கள் கண்டதில்லை.

9. பினாங்கில், மாணவர்கள் கணினி அறிவை பெற  அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் மாநில அரசு கணினி மையங்களை நிர்மாணித்துள்ளது.

10. பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அனைத்து இந்து கோவில்களையும் அவற்றின் தூய்மையான நிர்வாகத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் அவரின் திறமைக்கு சான்றாக லிம் குவான் எங் நிதி அமைச்சராக இருந்தபோது அனைத்து முக்கிய திட்டங்களின் செலவீனங்களையும் குறைந்தார்.  குறிப்பாக எல்ஆர்டி திட்டத்தின் வெ.15 பில்லியனை குறைத்து அதன் செலவீனத்தை மிச்சப்படுத்தினார். இதனால் அரசாங்கம், வரி செலுத்துவோரின் பணத்தை மிச்சபடுத்தி மற்ற துறைகளுக்கு அனுப்பப்பட்டது.

இறுதியாக, “பிரித்து ஆளும்” காலனித்துவ அமைப்பைப் போன்ற இன அடிப்படையிலான மனநிலையில் நாம் ஏன் இன்னும் இருக்கிறோம்? சொந்த நலனுக்காக இன அடிப்படையிலான  ஒதுக்கீடுகளை அனுபவிக்கும் தலைவர்களை காட்டிலும் எங்களின் உரிமைகளை பாதுக்கா சிறந்த கொள்கைகளை முன்னெடுக்கின்ற அரசாங்கமும் தலைவர்களுமே தேவை.

 நம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் யார் சிறந்ததைச் செய்கிறார்களோ அவர்களை நாம் “வண்ண-குருட்டு” என்ற கருத்துடன் பாதுகாத்து ஆதரிக்க வேண்டும் என்று ராய்டு தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply