லெபோ அம்பாங் தீபாவளிச் சந்தை : பல தரப்பினருக்கு அன்பளிப்பு ! – சரவணன் பாராட்டு

Uncategorized

 90 total views,  2 views today

– குமரன் –

லெபோ அம்பாங் – 9/10/2022

தலைநகர், லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கம் 13ஆவது முறையாக ஏற்பாடு செய்திருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தில் மனிதவளா அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ மு சரவணன் கலந்து கொண்டார்.

வணிகர்களின் ஒற்றுமையைப் பேணும் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல்; பெருநாள் காலங்களில் வயதானவர்கள், இயலாதவர்களுக்கும் உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி பாராட்டுக்குரியது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வருடம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது அந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது.

இன்னிசை இரவோடு ஆடல் பாடல் என தீபாவளி களைகட்டத் தொடங்கிய அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply