லோவின் உரிமையை கேள்வி எழுப்புவதா?

Malaysia, News

 111 total views,  2 views today

கோலாலம்பூர்-

தந்தையினால் வயது குறைந்த தமது மூன்று பிள்ளைகளும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்திருக்கும் தனித்து வாழும் தாயான Loh Siew Hong-கின் உரிமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஸ் கட்சியை மலேசிய சர்வ சமயம் மன்றம் சாடியது.

இந்த விவகாரத்தில்  Loh Siew Hong-கின் சட்டப்பூர்வ உரிமையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாஸ் கட்சி கூறியிருப்பது தீவிரவாத, நிந்தனை அம்சத்தைக் கொண்டதாகும்.

அதோடு பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Khairil Nizam Khirudin வெளியிட்டுள்ள அறிக்கை கூட்டரசு அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்ட நெறிமுறைக்கு எதிராக உள்ளது என்று பெளத்தம், கிறிஸ்துவம், இந்து, சீக்கியம், தாவோயிசம் ஆகியவற்றுக்கான சர்வ சமய மன்றம் கூறியது.

மூன்று பிள்ளைகளின் மதத்தை மாற்ற முயற்சிக்கும் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்த Khairil Nizam Khirudin, இஸ்லாம் சமயத்தை தழுவியிருக்கும் அப்பிள்ளைகளின் சமய நம்பிக்கையை காப்பாற்ற இந்நாட்டிலுள்ள முஸ்லீகள் ஒன்றுபடுவார்கள் என்றும் அவர் இதற்கு முன் கூறியிருந்தார்.

Leave a Reply