வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்

Malaysia, News

 194 total views,  4 views today

எஸ்.ஷாண்

பூச்சோங்-

 தீபத்திருநாளை முன்னிட்டு பூச்சோங்கில்  வசதி குறைந்த மக்களுக்கு  பூச்சோங் மக்கள் முற்போக்குக் கழகம் (PROCOP) பரிசுக் குடைகள் மற்றும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வட்டாரத்தில் வசதி குறைந்த நிலையில் உள்ள அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் ராஜு கூறினார்.

இந்நிகழ்வுக்கு  சிறப்பு விருந்தினராக பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் செனட்டர் சுரேஷ் சிங், காவல் துறை ஏஎஸ்பி ராஜன் மற்றும் ஏஎஸ்பி அமுதா கலந்து கொள்கின்றனர்.

கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இக்கழகம் பூச்சோங்கில் செயல்பட்டு வருகிறது. பலதரப்பட்ட மக்களுக்கு இக்கழகம் பல உதவிகள் செய்து  வருகிறது.

மத, இன மற்றும் பேதமின்றி அனைத்து மக்களுக்கு செயல்படும் என்று ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணைத் தலைவர் மாரிமுத்து, உதவித் தலைவர் தங்கம்,செயலாளர் மன்சூர் ஆகியோர் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ-சேனல் E-Paper-ஐ படிக்க இதனை அழுத்தவும்..

Leave a Reply