வணிக நிர்வாகத் துறையில் முதுகலைப் பெற்றார் நவனீத் பிரபாகரன்

Uncategorized

 174 total views,  3 views today

சிலிம் ரீவர்-

மலேசிய திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைப் பெற்றார் நவனீத் பிரபாகரன்.


கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல்வேறு துறைகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும் தனது கல்வி பயணத்திற்கு எதுவும் தடையாக இருந்ததில்லை என்பதை நிரூபித்துள்ளார் நவனீத்.


சட்டம் – வணிகம் ஆகிய இரு துறைகளில் இரட்டை இளங்கலைப் பட்டத்தை முடித்த நவனீத், தமது துறை அல்லாத வணிக நிர்வாகத் துறையில் கொண்டிருந்த ஆர்வத்தினாலேயே இதில் முதுகலை பட்டத்தை நிறைவு செய்துள்ளார். குறிப்பாக, பொருளாதாரம், தொழில்முனைவர் பிரிவில் அவர் தமது பட்டயக் கல்வி நிறைவு செய்துள்ளார். அதிகமானவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இதற்கு அடித்தளம் அமைத்துள்ளது.


தனது உயர்கல்விக்கு பெரிதும் துணை நின்ற பெற்றோர், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நவனீத் குறிப்பிட்டார்.


சட்டத்துறை, நிர்வாகம், வணிகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மருத்துவம் தொடர்பான வணிகத்திலும் மிக விரைவில் நவனீத் ஈடுபட இருக்கிறார்.

Leave a Reply