வரலாற்று நாயகன் துன் ச. சாமிவேலுவின் 87-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவலைகள்

Malaysia, News

 207 total views,  2 views today

கோலாலம்பூர் | 6-3-2023

பிறப்பவர் அனைவரும் ஓர் நாள் இறப்பதுண்டு. சிலர் இறப்பார், சிலர் மறைவார், ஒரு சிலர் மட்டுமே காலமானார் எனும் அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆவார்கள். அவர்களது மரணம் காலத்தால் அழியாதது.

அப்படி மறைந்தும் மறையாது நமது நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும் மாண்பிற்கும், மதிப்பிற்குமுரிய துன் ச. சாமிவேலு அவர்களின் 87-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு..

“துன் ச.சாமிவேலு நினைவலைகள்”

நாள் : 08/03/2023, புதன்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : நேதாஜி மண்டபம், ம.இ.கா தலைமையகம் கோலாலம்பூர்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்த மாமனிதர். அவரால் கற்றவர் பாதி, உயர்ந்தவர் மீதி. எளியோரையும் ஏற்றம் பெறச் செய்தவர். தரணி போற்றும் முத்திரைப் பதித்தவரர். சாதனைப் படைத்து சரித்திரம் தீட்டியவர். ஒரு சகாப்தம் மறைந்தது. ஆனால்
என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கா தஞ்சம்

ம.இ.காவின் ஏற்பாட்டில் துன் ச.சாமிவேலு எனும் மாபெரும் சகாப்தத்தின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ள அனைவரும் திரண்டு வாருங்கள்.

பொது மக்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் !

Leave a Reply