வறிய நிலையிலான மக்களுக்கு தீபாவளி பலகார பொட்டலங்கள் – கணபதிராவ்

Malaysia, News

 359 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்திலுள்ள வறிய மக்களுக்கு உதவிடும் வகையில் சிலாங்கூர் மாநில் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஏற்பாட்டில் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலானோர் வேலை, வருமானம் இழந்துள்ள நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் தீபாவளி பலகாரப் பொட்டாலங்கள் அடங்கிய பொட்டலங்கள் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத் தலைவர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், பொது இயக்கத்தினர் ஆகியவற்றின் வழியாக விநியோகிக்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 3,500 உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாண்டு தீபாவளியை இந்தியர்கள் கொண்டாடி மகிழ வேண்டும் எனும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்திய சமூகத் தலைவர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் வறிய நிலையிலான மக்களை அடையாளம் கண்டு அவற்றை விநியோகிப்பர் என்றும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

ஐ-சேனல் ஐ படிக்க இதை அழுத்தவும்..

இதனிடையே, கம்போங் பாரு ஹைக்கோம்/ அலாம் மேகா வட்டார் இந்திய சமூகத் தலைவர் கோபி முனியாண்டி இவ்வட்டாரத்திலுள்ள 50 மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு பொட்டலங்களை விநியோகம் செய்தார்.

வறிய நிலையில் உள்ள மக்கள் அடையாளம் காணப்பட்டு இந்த உதவிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக கோபி கூறினார்.

Leave a Reply