வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி

Uncategorized

 360 total views,  1 views today

ஈப்போ-

கோவிட்-19 பெருந்தொற்றால் வேலை இழந்து வருமானம் இழந்து தவிக்கும் தரப்பினருக்கு உதவிடும் வகையில் பேரா மாநில இளைஞர் மன்ற தன்னார்வல உறுப்பினர் குஷ்விந்தேரா சிங்  ஈப்போ மாநகரில் உள்ள குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

மலேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினரும் ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவருமான எஸ்.ஜெயகோபி, மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தம்பூன் கிளை தலைவர் தினேஷ் காளியப்பன், துணைத் தலைவர் நாகேந்திரன் உட்பட தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

பல்வேறு உணவுப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன என்று குஷ்விந்தேரா சிங் கூறினார்.

Leave a Reply