வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு வெ.2.19 மில்லியன் ஒதுக்கீடு

Malaysia, News, Politics

 182 total views,  1 views today

கோலலங்காட்,நவ.12-

வறுமை ஒழிப்பு பெருந்திட்ட உதவி திட்டத்திற்காக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டு வெ.2.19 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

சிறு வர்த்தகங்களை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு உதவிடும் வகையில் வர்த்தக உபகரணங்களை வழங்கும் திட்டத்தின் வாயிலாக 529 பேர் பயனடைந்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை இத்திட்டத்திற்கு 1 கோடியே 66 லட்சம் வெள்ளி செலவிடப்பட்ட வேளையில் இந்த நிதியுதவியின் வாயிலாக 5,035 வணிகர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை. வருமானம் ஈட்டுவதற்கு உதவக்கூடிய திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது என்று  ஐ-சீட் உதவித் திட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வின்போது கண்பதிராவ் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உதவித் திட்டங்களின் வாயிலாக அவர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply